×

சபரிமலையில் இனி ஒருநாளைக்கு 45,000 பக்தர்களுக்கு அனுமதி: தேவசம் போர்டு அறிவிப்பு

கோட்டயம்: சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய இனி 40,000 பக்தர்களுக்கு ஆன்லைன் முறையிலும், 5,000 பக்தர்களுக்கு நேரடி முன்பதிவு முறையிலும் அனுமதி அளிக்கப்படுகிறது.

நிலக்கல், எருமேலி உள்ளிட்ட 10 இடங்களில் நேரடியாக முன்பதிவு செய்யும் வசதிகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது. ஸ்பாட் புக்கிங்கிற்கு பரிசீலிக்க, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட RT-PCR எதிர்மறை சோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பக்தர்கள் அசல் ஆதார் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு எல்லையோர நகரமான குமிலியில் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. பம்பா - நீலிமலை - அப்பாச்சிமேடு - சரம்குத்தி வழியாக பயணிக்க அனுமதிப்பது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.

Tags : Sabarimala ,Devasam Board , sabarimala
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு