×

அமமுக பிரமுகர் உட்பட மூவர் ஆக்கிரமித்த 100 கோடி மதிப்புள்ள புறம்போக்கு நிலம் மீட்பு

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே அமமுக பிரமுகர் உட்பட மூவர் ஆக்கிரமித்த 100 கோடி மதிப்பிலான 12 ஏக்கர் புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டது.  ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கிளாய் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு மற்றும் வரவுக் கால்வாயினை அதே பகுதியை சேர்ந்த சிலர் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் அமைத்திருப்பதாக காஞ்சிபுரம் கலெக்டருக்கு புகார் வந்தது.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் பெரிய ஏரியின் உபரிநீர் செல்லக்கூடிய நீர்நிலை புறம்போக்கு நிலம் மற்றும் வரவுக் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதை அமமுக பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். பின்பு போலீசார் உதவியோடு பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் சுமார் 100 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான 12 ஏக்கர் பரப்பளவு நீர்நிலை புறம்போக்கு நிலத்தினை 3 பொக்லைன் இயந்திரம் மூலம் சுற்று சுவர்களை அகற்றிமீட்டனர்.

Tags : Ammukha Pramukar , Ammk , Outlying Land, Recovery
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...