×

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளராக விக்டரிமோகன் நியமனம்

சென்னை: மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளராக விக்டரி மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மூத்த துணைத் தலைவராக இருப்பவர் விக்டரிமோகன். இவரை, மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், திருவள்ளூர் தொகுதி எம்.பியுமான ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நியமித்துள்ளார்.

இதனையடுத்து, விக்டரி மோகன், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.ஜெயக்குமார் எம்.பி ஆகியோரை  சந்தித்து வாழ்த்துப்பெற்றார். மேலும், மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட விக்டரி மோகனை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து  சால்வை அணிவித்து வாழ்த்தினர்.


Tags : Victorimohan ,Central Chennai West District ,Congress ,Officer , Victorimohan appointed Central Chennai West District Congress Officer
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...