தமிழகத்தில் மேலும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணதாரர்களை ஆதார் மூலம் அடையாளம் காணும் நடைமுறை டிச.1ம் தேதி முதல் அமல்: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் தகவல்

சென்னை:ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் ஆவணதாரர்களை ஆதார் வழியில் அடையாளம் காணும் நடைமுறை மேலும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் டிச.1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் தெரிவித்தார். தமிழக பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவணதாரர்களை ஆதாரம் வழி அடையாளம் காண புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 109 அலுவலகங்களில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டது. தற்போது இந்த நடைமுறை டிசம்பர் 1ம் தேதி முதல் 100 அலுவலகங்களுக்கு விரிவுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மண்டலத்தில் மாதவரம், செம்பியம், படப்பை, பம்மல், கோடம்பாக்கம், 2ம் எண் இணை சார்பதிவகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் 1ம் எண் இணை சார்பதிவகம், திருவலங்காடு, நெல்லை மண்டலத்தில் செங்கோட்டை, தென்காசி 1ம் எண் இணை சார்பதிவகம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், அருமனை, மார்த்தாண்டம் 1ம் எண் இணை சார்பதிவகம், நாங்குநேரி, வள்ளியூர், கடம்பூர், எட்டையபுரம், இரணியல், ராஜாக்கமங்கலம், தூத்துக்குடி 1ம் எண் இணை சார்பதிவகம், மேலூர்-தூத்துக்குடி, மதுரை மண்டலம் இளையான்குடி,

நயினார்கோயில், தல்லாகுளம், தாமரைபட்டி, விருதுநகர் 1ம் எண் இணை சார்பதிவகம், வத்ராயிருப்பு, சின்னமனூர், திருப்பரங்குன்றம், கள்ளிக்கடி, கொடைக்கானல், திண்டுக்கல் 1ம் எண் இணை சார்பதிவகம், வெளிப்பட்டினம், ராமநதாபுரம் 2ம் எண் இணை சார்பதிவகம், கீரனூர், குஜியலம்பாறை, திருப்பத்தூர், சிங்கம்புனரி உட்பட 100 அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டிஐஜிக்கள் இதனை கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்களின் கைரேகை, கருவிழியை படம் பிடிக்கும் போது, சம்பந்தப்பட்ட நபர்தானா என்பதை ஆதார் வழியாக அடையாளம் காண முடியும்

Related Stories: