×

நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் முல்லை பெரியாறு அணை திறப்பு

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் எந்தெந்த அடியில் நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அக்.29ம் தேதி வரை 139 அடியாகவும், நவம்பர் 20ம் தேதி வரை 141 அடியாகவும், அதன் பிறகு 142 அடியாகவும் நிறுத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி கடந்த அக்.29ம் தேதி நீர்மட்டம் 139 அடியை தாண்டியது. இதையடுத்து அன்று அணை திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. இதையடுத்து. அணை திறக்கப்பட்டது.  வினாடிக்கு 1544 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mullaperiyaru dam , Water level, umbilical cord, dam
× RELATED முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக...