சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

சென்னை: சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு கிழக்கு வங்க கடல், மாற்றும் தென் மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று 11.30 மணியளவில் மாறியுள்ளது.

இது சென்னைக்கு 310km தொலைவிலும், புதுச்சேரிக்கு 270km தொலைவிலும் உள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து  நாளை அதிகாலை 19.11.2021 வட தமிழக-தெற்கு ஆந்திரா  கரை கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

Related Stories:

More