- மத்திய அரசு
- கே.எஸ். அலகிரி
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
- ஜனாதிபதி
- கே.எஸ்.அழகிரி
- மத்திய நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த 28ம் தேதி காணொளி வாயிலாக ஜி.எஸ்.டி. மன்றத்தின் 43வது கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட 31 மாநில நிதியமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். அனைத்து மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு நியாயம் வழங்குகிற வகையில் மத்திய அரசு செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மொத்த ஜி.எஸ்.டி. வருவாயில் 60 சதவீதமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63 சதவீதமும் பாஜ ஆட்சி செய்யாத மாநிலங்களில் இருந்து தான் வருகிறது. இந்த அடிப்படை உண்மையை உணராமல் மேற்கு வங்காளம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆட்சி செய்கிற பாஜ அல்லாத கட்சிகள் முன்வைக்கிற கோரிக்கைகளைப் பாரபட்சமின்றி பார்க்காமல், அரசியல் உள்நோக்கத்தோடு பார்ப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. மத்திய பாஜ அரசு மாநிலங்களின் நிதி சுதந்திரத்தைப் பறிக்க முயற்சி செய்கிறது. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துவதில் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் மாநிலங்களின் வரி வருவாய் குறைந்து கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலங்களில் அவற்றை எதிர்கொள்வதில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கிற வகையில் மாநிலங்களுக்குச் சேரவேண்டிய வரி வருவாயை வழங்குவதில் மத்திய பாஜஅரசு பாரபட்சம் காட்டுவதை வன்மையாகக் கண்டிக்கதக்கது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….
The post மாநிலங்களின் நிதி சுதந்திரத்தை பறிக்க மத்திய அரசு முயற்சி: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
