×

மழை பாதித்த பகுதிகளில் சி.டி.ரவி ஆய்வு

சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் பாஜ தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி நேற்று ஆய்வு செய்தார். சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாஜ தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பாஜ பொறுப்பாளருமான சி.டி.ரவி நேற்று ஆய்வு நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்கள் வழங்கினார். தொடர்ந்து அவர் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் தங்கசாலைத் தெருவில் ஆதியப்பன் நாயக்கன் தெரு சந்திப்பில் பாஜ மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.



Tags : Rain, Areas, CD Ravi, Study
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்