6 விமானங்கள் பெங்களூரு, ஐதராபாத் திரும்பின: 8 சர்வதேச விமானங்கள் ரத்து

சென்னை: சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கொச்சியிலிருந்து காலை 10.50 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ், காலை 10.55 மணிக்கு மும்பையிலிருந்து வந்த ஏர் இண்டியா, மதுரையிலிருந்து காலை 11.05 மணிக்கு வந்த ஸ்பைஸ் ஜெட் ஆகிய 3 விமானங்கள் பெங்களூருக்கும், டெல்லியிலிருந்து காலை 11.30 மணிக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஐதராபாத்திற்கும் திருப்பி அனுப்பப்பட்டன. ஏற்கனவே காலையில் டெல்லி, மும்பையிலிருந்து வந்த இரண்டு தனியார் விமானங்கள் திருப்பி ஐதராபாத், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மொத்தம் 6 விமானங்கள் நேற்று சென்னையில் தரையிறங்க முடியாமல் திரும்பின. இதுபோல துபாய், சார்ஜாவிலிருந்து சென்னை வரும் 4 விமானங்கள், சென்னையிலிருந்து துபாய், சார்ஜா செல்லும் 4 விமானங்கள் என மொத்தம் 8 சர்வதேச விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே, சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் மட்டும் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய இயக்குநர் தெரிவித்திருந்தார்.

Related Stories: