×

கொரோனா பரிசோதனைக்கு பயந்து காட்டில் பதுங்கிய பழங்குடியினர்

பித்தோராகர்: உத்தரகாண்ட்டில்  கொரோனா பரிசோதனை  செய்வதற்காக வந்த மருத்துவ குழுவை  பார்த்து பயந்த பழங்குடியின கிராம மக்கள் காட்டுக்குள் தப்பிசென்றுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் கிராமங்களையும் அது விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் நலனை கருத்தில் கொண்டு வீடுதோறும் சென்று கொரோனா பரிசோதனை செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன .  உத்தரகாண்டின் குடா சவுரானி கிராமத்தில் பன்ராவாட் எனப்படும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படுகின்றது.  இந்நிலையில்  பழங்குடியின கிராமங்களில் இருப்பவர்களுக்கும்  கொரோனா பரிசோதனை  செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்வதற்காக குடா சவுரானி கிராமத்துக்கு சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் கொரோனா பரிசோதனைக்கு பயந்து அருகில் இருந்து காடுகளுக்குள் சென்று பதுங்கி கொண்டுள்ளனர். இது குறித்து அரசு அதிகாரி கூறுகையில், “ அல்டாரி மற்றும் ஜம்தாரி கிராமங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு 191 பேர் முன்வந்தனர்.  எனினும்  குடா சவுரானி கிராம பழங்குடியினர்  காடுகளுக்குள் தப்பி சென்றுவிட்டனர். சோதனையால் பாதிப்பு  ஏற்படும் என அவர்கள் அஞ்சுகின்றனர். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பரிசோதனை செய்வதற்கு மீண்டும் முயற்சிப்போம்” என்றார்.இது குறித்து  பழங்குடியினத்தை சேர்ந்த ஜகத் சிங்கிங் ரஜ்வார் கூறுகையில், “ நாங்கள் மருத்துவ பரிசோதனை மற்றும்  மருந்துகள் எடுத்துக்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் அந்த மருத்துவ குச்சி உடலில் செலுத்தப்படுவதை ஒப்புக்கொள்ள மாட்டோம்” என்றார். ஒரே மாதத்தில் 10 கோடி கோவிஷீல்ட்ஜூன் மாதம் 10 கோடி தடுப்பூசியை விநியோகிக்க தயாராகி வருவதாக சீரம் இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சீரம் இன்ஸ்டிட்யூட் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘நாட்டில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டை சீரம் இன்ஸ்டிட்யூட் கவனத்தில் கொண்டுள்ளது. இதனால் உற்பத்தியை அதிகரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்.  நடப்பு மே மாதத்தில் 6.5 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் உற்பத்தி செய்தது. இது ஜூன் மாதத்தில் 10 கோடியாக உயர்த்தப்படும். தங்களின் மேலான ஆலோசனைகளையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.’ இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.கடந்த 1967ம் ஆண்டு பன்ராவட்ஸ் பழங்குடியினர் சமூகத்தை  அழிவின் விளிம்பில் இருக்கும் பழங்குடியினராக அரசு அறிவித்தது. திதிஹட்  வட்டத்துக்குட்பட்ட 8 பகுதிகளில் 500க்கும் மேற்பட்டோர்  வசித்து வருகின்றனர்….

The post கொரோனா பரிசோதனைக்கு பயந்து காட்டில் பதுங்கிய பழங்குடியினர் appeared first on Dinakaran.

Tags : Pithoragarh ,Uttarakhand ,
× RELATED உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி...