சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரியிலும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யும். புதுச்சேரியிலும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளை கோவை, நீலகிரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.