×

அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு 19 மாதங்களுக்குப் பிறகு தற்பொழுது ஆரம்ப பள்ளிகள் கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் மூடப்பட்ட பள்ளிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது வரவேற்கதக்கது. ஆனால் ஆரம்ப பள்ளிகளில் குறைந்த அளவு ஆசிரியர்களே உள்ளனர். அவர்களை கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பாடங்களை நடத்துவது என்பது இயலாத ஒன்று. எனவே, வேறு பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை கொண்டு நிலைமையை சமாளிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை தமிழக அரசும், கல்வித்துறையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : GK Vasan , Government should increase the number of teachers in primary schools: GK Vasan insists
× RELATED கோடைகாலத்தில் தமிழக மக்களின் தண்ணீர்...