×

நைஜர் நாட்டில் கிராமத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் பயங்கர துப்பாக்கிச் சூடு!: அப்பாவி மக்கள் 70 பேர் சுட்டுக்கொலை..!!

நைஜர்: ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் என்ற நாட்டில் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு நகரின் மேயர் உள்பட அப்பாவி பொதுமக்கள் 70 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நைஜீரியா பாலி, புர்கினோ ஆகிய நாடுகளின் எல்லைகளை பகிர்ந்துக் கொள்ளும் நைஜர் நாடு உலகின் மிகவும் வறுமைமிக்க நாடாக ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். இங்கு அரசின் பாதுகாப்புப்படையை எதிர்த்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் அல்கொய்தா ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று மாலை எல்லை அருகே உள்ள அடாப்தாப் என்ற கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் புகுந்து சுட தொடங்கினர். இதில் தில்லாபெரி நகர மேயர் உள்பட 70 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இங்கு அடிக்கடி இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பதுண்டு. கடந்த மார்ச் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 137 பேர் உயிரிழந்தனர். ஆகஸ்டில் 16 பேர் கொல்லப்பட்டனர். இதே தில்லாபெரி பகுதியில் கடந்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tags : Niger , Niger, extremists, firing
× RELATED நைஜரில் இருக்கும் இந்தியர்கள்...