×

நைஜரில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும்: வெளியுறவு துறை அமைச்சகம் அறிவுரை

புதுடெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள நைஜர் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வெளியுறவு துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.  நைஜர் நாட்டில் கடந்த மாதம் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதிபர் முகமது பாசிமிடம் இருந்து ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இந்நிலையில் நைஜரில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

வௌியுறவு துறை அமைச்சர் அரிந்தம் பாக்சி செய்தியாளர் சந்திப்பின்போது, நைஜரில் நடக்கும் சூழலை இந்தியா தொடர்ந்து கவனித்து வருகின்றது. அங்கு சுமார் 250 இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தப்படுகின்றது. எல்லை வழியாக வெளியேறும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தூதரகத்தில் பெயர்களை உடனடியாக பதிவு செய்வது அவசியம்” என்றார்.

The post நைஜரில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும்: வெளியுறவு துறை அமைச்சகம் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Indians ,Ministry of External Affairs ,New Delhi ,Niger ,Dinakaran ,
× RELATED சீனாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில்!