×

ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் சிறப்பு தள்ளுபடி விற்பனை

சென்னை: ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் ராசி கற்கள் போன்றவற்றில் நவீன மற்றும் பாரம்பரிய ஆபரண நகைகளை வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் வடிவமைத்து வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் `தங்க தீபாவளி சலுகைகள்’ மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் `ஸ்வர்ண தீபாவளி சலுகைகள்’ என இந்தாண்டு தீபாவளியை இன்னும் சிறப்பாக கொண்டாட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் பல சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்கத்தின் எடைக்கு நிகரான வெள்ளி முற்றிலுமாக இலவசம். வைரம் காரட்டிற்கு 25 கிராம் வெள்ளி இலவசம்.

மேலும், வெள்ளிப் பொருட்களின் செய்கூலியில் 25% தள்ளுபடி மற்றும் வெள்ளி நகைகளின் MRP மீது 10% தள்ளுபடியும் உள்ளது. இதுகுறித்து, ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.அனந்த் அனந்த பத்மநாபன் கூறுகையில், `இந்த ஆண்டு தங்க தீபாவளியை மக்கள் அனைவரும் கோலாகலமாகவும், பேரின்பமாகவும் கொண்டாட வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டார். ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், `வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப ட்ரென்டியாகவும், ட்ரெடிஷனாகவும் லேட்டஸ்ட் ஆபரண கலெக்ஷன்கள் அனைத்தும் பிரத்யேகமாக வழங்குகிறோம்’ என்றார்.

Tags : GRT Jewelers , Special discount sale at GRT Jewelers
× RELATED வளசரவாக்கத்தில் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் புதிய ஷோரூம் திறப்பு