அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பார்களுக்கு சீல்

பல்லாவரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் சட்ட விரோதமாக இருபத்து 24 நேரமும் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகேஸ்வரிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன்படி நேற்று பம்மல் நாகல்கேணி பிரதான சாலையில் உள்ள கடை இரு டாஸ்மாக் பார்களில் கலால் உதவி ஆணையாளர் லெட்சுமணன் மற்றும் சங்கர் நகர் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

அதிகாரிகள் அங்கு மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசூரை சேர்ந்த வினோத்(33) என்பவரை கைது செய்தனர். அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 80 மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர். மேலும், சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 2 பார்களையும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Related Stories:

More