டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பரிதாப பலி

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி  தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் சுருதி (12). தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தாள்.  இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென சுருதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். பெற்றோர் அவளை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்கு டெங்கு பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதனால் சிறுமியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமி சிகிச்சை பெற்று வந்தாள்.

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி சுருதி நேற்று பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories:

More
>