×

ஆயுதபூஜையை முன்னிட்டு 12, 13ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 3,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்: 3 இடங்களில் இருந்து புறப்படுகிறது

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்க வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு 3500 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு: முதல்வரின் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்காக வருகின்ற ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12, மற்றும் 13 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற பேருந்துகள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது இயக்கப்பட்டது போன்று, கீழ்கண்ட அட்டவணைபடி  இயக்கப்படும் மற்றும் இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

தாம்பரம் மார்க்கம்: தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள். போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள். மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

பூந்தமல்லி மார்க்கம்: வேலூர், ஆரணி, ஆற்காடு,  திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும்  திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு: மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம்,  திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோ ட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர்) இயக்கப்படும். மேலும், மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து   இணைப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Ayudha Puja , 3,500 special buses plying across Tamil Nadu on 12th and 13th ahead of Armed Forces Pooja: Departing from 3 locations
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...