×

கேலி பேச்சுகளுக்கு இடையே படித்து போலீஸ் பணியில் சேர்ந்தேன்: திருநங்கை எஸ்ஐ பிரித்திகா யாஷினி பரபரப்பு பேச்சு

சென்னை: பல்வேறு இன்னல்களுக்கும், கேலி பேச்சுக்களுக்கு இடையே உதவி ஆய்வாளராக காவல் பணியில் சேர்ந்தேன் என்று தமிழக காவல் துறையில் சேர்ந்த முதல் திருநங்கை எஸ்ஐ பிரித்திகா யாஷினி தெரிவித்துள்ளார். சென்னையில் வசிக்கும் திருநங்கைகள் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், நல்வழிப்படுத்தவும், போலீசார் திருநங்கைகளை கண்ணியமான முறையில் கையாண்டு உறுதுணையாக செல்படுவதற்கான விழப்புணர்வு நிகழ்ச்சி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

சென்னை மாநகர காவல் துறை தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன் தலைமையில் நடந்த இந்த கலந்தாய்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, சிறப்பு விருந்தினராக ஆதிலட்சுமி லோகமூாத்தி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சக்திதேவி (திருநங்கை), திருநங்கை காப்பகம் நடத்தி வரும் தோழி அமைப்பின் திட்ட மேலாளர் சவிதா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து  கொண்டனர். இதில், தமிழக காவல் துறையின் முதல் திருநங்கை உதவி ஆய்வாளரும், தற்போது சென்னை மாநகர காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் பிரித்திகா யாஷினி பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது, ‘நான் பல்வேறு இன்னல்களுக்கும், கேலி பேச்சுகளுக்கும் இடையே கல்வி பயின்று உதவி ஆய்வாளராக காவல் பணியில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறேன். இந்த பணியில் நான் முழு அர்ப்பணிப்புடன் நல்ல மரியாதையுடன் பணியாற்றி வருகிறேன். என்னை போல் நீங்களும் நல்ல முறையில் படித்து முன்னுக்கு வர வேண்டும். அதற்கான உதவிகளை காவல் துறை உங்களுக்கு செய்யும். அதை முறையாக பயன்படுத்தி என்னை போல் நீங்களும் சாதித்து உயரவேண்டும்’. இவ்வாறு அவர் பேசினார்.

திருநங்கைகளுக்கு உதவி செய்யும் வகையில் 18.11.2020ம் ஆண்டு இணை கமிஷனராக இருந்த சுதாகர் திருநங்கைகளை நேரில் அழைத்து அவர்கள் சுய தொழில் செய்யவும், படிக்கவும் பல்வேறு உதவிகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியில் நான் முழு அர்ப்பணிப்புடன் நல்ல மரியாதையுடன் பணியாற்றி வருகிறேன்.


Tags : Prithvika Yashini , Teasing, Police, Transgender, SI Prithvika Yashini
× RELATED சாலையில் நடந்து சென்ற வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு