×

சிறுவர்களுக்கான ஜைகோவ்-டி 3 டோஸ் தடுப்பூசி விலை ரூ. 1,900

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நோய்க்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்பூட்னிக்-வி போன்ற தடுப்பூசிகள், மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அடுத்தக்கட்டமாக 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை ஒன்றிய அரசு வைத்துள்ளது. இதற்கான தடுப்பூசியை வாங்குவதற்கு பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஜைடஸ் காடிலா மருந்து நிறுவனம், சிறுவர்களுக்காக ‘ஜைகோவ்-டி’ என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

இந்த மருந்தத 3 டோஸ்களாக போட வேண்டும். இந்த 3 டோஸ் மருந்துக்கும் இந்த நிறுவனம் ரூ.1,900 விலை கேட்டு வருகிறது. ஆனால், இந்த விலையை குறைப்பதற்காக அதனுடன் ஒன்றிய அரசு பேச்சு நடத்தி வருகிறது. எனவே, இந்த மருந்து பயன்பாட்டுக்கு வர மேலும் ஒரு வாரமாகும் என்று தெரிகிறது. இது குறித்து ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், ‘ஊசியின்றி உடலில் செலுத்தும் வகையில் 3 டோஸ் கொண்ட ஜைகோவ்-டி தடுப்பூசி வந்துள்ளது. இதன் விலை மற்ற தடுப்பூசி மருந்துகளை விட அதிகமாக உள்ளது. எனவே, விலையை குறைப்பதற்காக மருந்து நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம்,’’ என்றார்.

Tags : Gykov-D3 dose vaccine for boys costs Rs. 1,900
× RELATED பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட...