×

கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய 28 அலுவலர்கள் கொண்ட 12 குழு தொல்லியல் துறையில் அமைப்பு

சென்னை :  சென்னை உயர் நீதிமன்ற குற்ற புலனாய்வு வழக்கில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்ளில் சிலைகள் களவு தொடர்பான வழக்கில் 5வது பிரதிவாதியாக தொல்லியத்துறை ஆணையர் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, தொல்லியல் துறையின் அலுவலர்களை கொண்ட குழு ஒன்று அமைத்து, அக்குழு காலமுறை அடிப்படையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு அனுப்பி சிலைகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 28 அலுவலர்களை கொண்டு 12 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அந்தெந்த மண்டல இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர்  எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இந்த குழுவில் சென்னை மண்டலத்தில் தொல்லியல் அலுவலர்கள் பாக்கியலட்சுமி, சுபலட்சுமி, வேலூர் மண்டலத்தில் ரஞ்சித், சுபாஷினி, விழுப்புரம் மண்டலத்தில் காவியா, விக்டர் ஞானராஜ், திருச்சி மண்டலத்தில் சாய்பிரியா, பிரபாகரன், சக்திவேல், தஞ்சாவூர் மண்டலத்தில் தங்கத்துரை, உமையாள், காஞ்சிபுரம் மண்டலத்தில் லோகநாதன், ஸ்ரீகுமார், மற்றொரு சுபாஷினி, மயிலாடுதுறை மண்டலத்தில் பாஸ்கர், வசந்தகுமார், சேலம் மண்டலத்தில் வெங்க குரு பிரசன்னா, பரந்தாமன், கோவை மண்டலத்தில் நந்தகுமார், ஜெயப்பிரியா, சுரேஷ், மதுரை மண்டலத்தில் பரத்குமார், ரமேஷ், சிவகங்கை மண்டலத்தில் சுரேஷ், அஜய்குமார், சக்திவேல், திருநெல்வேலி மண்டலத்தில் ஆசைதம்பி, பாஸ்கர், காளீஸ்வரன், ஹரிகோபாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

இந்த குழு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அனுப்பி கோயில்களில் உள்ள பழைய சிலைகளில் ஏதாவது மாற்றம் செய்யப்பட்டுள்ளதா, பாதுகாப்பாக உள்ளதா, இல்லை திருடு போயுள்ளதா என ஆய்வு செய்கின்றனர். இந்த குழு சென்னை உயர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைமுறையில் உள்ளதால் விரைந்து ஆய்வுகளை மேற்கொண்டு ஒவ்வொரு மாதமும் தொல்லியல் துறை ஆணையருக்கும், அறநிலையத்துறை ஆணையருக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும்.  எனவே, இந்த  குழுக்கள் மூலம் ஆய்வு செய்யப்படுவதற்கு ஏதுவாக அனைத்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். எனவே, கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிடுமாறு இணை ஆணையர், துணை ஆணையர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags : Temple, Statues, Officers, Department of Archeology
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...