×

மபியில் போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக எல்.முருகன் தேர்வு

போபால்: சமீபத்தில், ஒன்றிய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகனுக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால் எம்பியாக தேர்வு செய்யப்படாத இவர், 6 மாதத்தில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

 காலியான அந்த இடத்துக்கு பாஜ வேட்பாளராக எல்.முருகனை கட்சி தலைமை அறிவித்தது.  வரும் 4ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருந்த நிலையில், வேறு யாரும் போட்டியிடாததால், எல்.முருகன் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேேபான்று திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த சுஷ்மிதா தேவ் மேற்குவங்கத்தில் இருந்து போட்டியின்றி ராஜ்யசபாவுக்கு தேர்வாகியுள்ளார்.

Tags : L. Murugan ,Mabi , State level MP, L. Murugan, elected
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...