கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி ஐடி ஊழியர் பரிதாப பலி

சென்னை: மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் (26). ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை, இவர் தனது நண்பர்களான வானகரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (26), பட்டாபிராம் சோரஞ்சேரி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (27) ஆகியோருடன் காரில் அரண்வாயல் பகுதிக்கு சென்று, பூண்டியிலிருந்து செம்பரம்பாக்கம் செல்லும் கிருஷ்ணா இணைப்பு கால்வாயில் குளித்துள்ளார்.

அப்போது, சஞ்சீவ் ஆழமான பகுதியில் சிக்கி கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்து செவ்வாப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கால்வாயில் தண்ணீர் நிறுத்திவிட்டு சஞ்சீவை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின், நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் சஞ்சீவ் உடலை கண்டெடுத்தனர். பின்னர், சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Related Stories: