×

சீதாராம் யெச்சூரி தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரியின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தோழர் சீதாராம் யெச்சூரியின் தாயார் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தாயை இழந்து வாடும் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Sidharam Yechuri ,Diocese BC ,Q. Stalin , Chief Minister MK Stalin's condolences on the death of Sitaram Yechury's mother
× RELATED அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள்,...