×

டிஎன்பிஎஸ்சி தகவல்: அரசுத்துறை தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குர்லா வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி 153 துறை தேர்வுகளை கடந்த மாதம் 16ம் தேதி முதல் 27ம் தேதி வரை(19, 22ம் தேதி நீங்கலாக) நடத்தியது. புதிய பாடத்தின்படி சென்னை மற்றும் டெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் கொள்குறி வகை சார்ந்த 122 தேர்வுகளின் உத்தேச விடைகளை தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. துறை தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுதிய கொள்குறி வகை தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.

உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள்(இன்று முதல் அக்டோபர் 2ம் தேதி மாலை 5.45 மணி வரை) விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண்,  வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவே மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரியை தவிர்த்து கடிதம் வாயிலாக விண்ணப்பதாரரின் மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால் அத்தகவல் ஏற்று கொள்ளப்படாது.

Tags : TNFC , DNPSC Info: Release of Key Answer for Government Examination
× RELATED விராலிமலை இலுப்பூர் தெரசா...