×

ஜோப்ரா ஆர்ச்சருக்கு அறுவை சிகிச்சை

லண்டன்: வலது முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வந்த இங்கிலாந்து அணி வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடைசியாக கவுன்டி சாம்பியன்ஷிப்பில் சசெக்ஸ் அணிக்காக களமிறங்கிய அவர், கென்ட் அணியுடன் இந்த மாத தொடக்கத்தில் நடந்த ஆட்டத்தில் வெறும் 5 ஓவர் மட்டுமே வீசிய நிலையில் போட்டியில் இருந்து விலகினார். காயத்தின் தன்மை தீவிரமாக இருந்ததால் அறுவைசிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் அறிவுறித்தியதை தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ச்சருக்கு (26 வயது) வெற்றிகரமாக ஆபரேஷன் நடைபெற்றதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.ஒரு மாத காலம் ஓய்வெடுக்க வேண்டியிருக்கும் என்பதுடன், முழு உடல்தகுதி பெற நீண்ட நாட்களாகும் என்பதால் இந்திய அணிக்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் (5 போட்டி) ஆர்ச்சர் களமிறங்குவது கேள்விக்குறியாகி உள்ளது. இந்தியா – இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4ம் தேதி நாட்டிங்காம், டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்குகிறது. …

The post ஜோப்ரா ஆர்ச்சருக்கு அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Zobra Archer ,London ,England ,Dinakaran ,
× RELATED மலர்களோடு பூத்துக் குலுங்கும்