பாஜ மூத்த எம்எல்ஏவுக்கு பெருமை குஜராத்தில் முதல் பெண் சபாநாயகர்

அகமதாபாத்: குஜராத்தில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்த ராஜேந்திர திரிவேதி, கடந்த 16ம் தேதி ராஜினாமா செய்தார். இம்மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற பூபேந்திர படேல் அமைச்சரவையில் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் ராஜினாமா செய்ததால் காலியான சபாநாயகர் பதவிக்கு மூத்த பாஜ பெண் எம்எல்ஏ நிமாபென் ஆச்சாரியா தேர்வு செய்யப்பட இருக்கிறார். எதிர்க்கட்சியான காங்கிரசும் இவருடைய நியமனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், அவர் போட்டி இன்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட உள்ளார். இதன்மூலம், குஜராத் சட்டப்பேரவையின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை இவர் பெற உள்ளார்.

Related Stories:

More
>