×

5.5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வருகை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது. இதற்காக, வாரம்தோறும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்களையும் நடத்துகிறது. பொதுமக்களும் ஆர்வமாக வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொள்கின்றனர்.
எனவே, ஒன்றிய அரசிடம் தமிழக முதல்வர் வாரம்தோறும் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து ஒன்றிய சுகாதாரத்துறை தமிழ்நாட்டிற்கு நேற்று மேலும் 5.5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு  தடுப்பூசிகளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து விடுவித்தது. அந்த 5.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் அடங்கிய 46  பார்சல்கள் நேற்று பகல் 12.10 மணிக்கு புனேவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தன. இந்த தடுப்பூசி பார்சல்கள் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

Tags : Covshield , 5.5 lakh dose Covshield vaccine visit
× RELATED 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தது