உயரழுத்த மின்கம்பி அறுந்துவிழுந்து 35க்கும் மேற்பட்ட பன்றிகள் சாவு: மதுராந்தகம் அருகே சோகம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே உயரழுத்த மின்கம்பி அறுந்துவிழுந்ததில் 35க்கு மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்தது. மதுராந்தகம் நகரம் சூரக்குட்டை, அப்துல்கலாம் நகர் பகுதிகளில் பன்றி வளர்ப்பு தொழில் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து வெளியூர்களுக்கும் பன்றிகள் அனுப்பிவைக்கின்றனர். இந்த நிலையில், நேற்று அதிகாலையில் மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்துல்கலாம் நகர் பகுதியில் செல்லும் உயரழுத்த மின்கம்பத்தில் வயர் அறுந்து  கழிவுநீர் கால்வாயில் விழுந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் கால்வாயில் ஏராளமான பன்றிகள் இறங்கியுள்ளது. இதில் ஷாக் அடித்து 35க்கும் மேற்பட்ட பன்றிகள் பரிதாபமாக உயிரிழந்தன.

இதைபார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உஷாராகிவிட்டனர். உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே இதுபற்றி அறிந்ததும் பன்றி வளர்ப்பவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். தாங்கள் வளர்த்த பன்றிகள் இறந்துகிடந்ததால் சோகத்தோடு அவற்றை பார்த்தனர். மேலும் இறந்த பன்றிகள் அனைத்தும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான என தெரியவந்தது. கால்வாயில் பன்றிகள் இறந்தது பார்த்து பொதுமக்கள் உஷாராகிவிட்டனர். இல்லாவிட்டால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். அறுந்துவிழுந்த மின்கம்பியை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Related Stories: