×

அஜித்தின் வலிமை பொங்கலுக்கு ரிலீஸ்

சென்னை: அஜித் நடித்துள்ள வலிமை படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர். அவர் இந்தியில் பல படங்களை தயாரித்தார். தமிழில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க போனி கபூருக்கு அஜித் கால்ஷீட் தந்தார். அதன்படி வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்தார். இந்த படத்தையடுத்து, மீண்டும் இயக்குனர் வினோத், போனிகபூர் கூட்டணியில் வலிமை படத்தில் நடிக்க அவர் கால்ஷீட் ஒதுக்கினார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதில் அஜித் ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார். கார்த்திகேயா, சுமித்ரா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கான அப்டேட் கேட்டு, ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த படம் அக்டோபரில் திரைக்கு வரலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு வலிமை வெளியாகும் என டிவிட்டரில் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

Tags : Ajith ,Pongal , Ajith's strength released for Pongal
× RELATED அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்