×

ஊர்காவல் படையினர் ஊதியத்தை அரசு உயர்த்தும் என்று நம்புகிறோம்: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: ஊர்காவல் படையினர் ெதாடர்பாக தமிழக அரசு, 2019ம் பிப்ரவரி 19ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜராகிவாதிட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 10 நாட்கள் என்பது குறைந்தபட்ச பணிநாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நாட்கள் பணி வழங்கப்படும். உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஊர்காவல் படையினரை பணிவரன் முறைப்படுத்த முடியாது. தாமாக முன்வந்து சேவை செய்பவர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் ஊதியம் வழங்கப்படுகிறது என்று விளக்கமளித்தார்.

 வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேலைவாய்ப்பு இல்லாமல் பலர் ஊர்காவல் படையில் சேர்ந்து வருவாய் ஈட்டும் நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும். 10 நாட்கள் பணி வழங்கப்படுவதாக அரசு கூறினாலும், பல ஊர்காவல் படையினர் மாதம் முழுவதும் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இதை முறைப்படுத்த வேண்டும். யாருக்கும் சாதகமாக செயல்படாமல் தேர்வு மற்றும் பணிக்கு உரிய விதிகளை வகுக்க வேண்டும். ஊர்காவல் படையில் உள்ள ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட 5600 ரூபாய் ஊதியம் கிடைக்கும் வகையில் பணி வழங்க வேண்டும். ஊர்காவல் படையினருக்கான ஊதியத்தை அரசு உயர்த்தும் என்றும், காவல்துறையினரின் ஊதியம் மாற்றியமைக்கப்படும் என்றும் நம்புகிறோம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Kayts , We hope the government will increase the salaries of Kayts soldiers: High Court opinion
× RELATED ஊர்க்காவல் படையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்