இமாச்சல் சட்டப்பேரவை பொன்விழா

சிம்லா: இமாச்சல் பிரதேச மாநிலம் உதயமாகி 50 ஆண்டுகள் முடிந்தள்ளது. இதை முன்னிட்டு பொன்விழா ஆண்டு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக 4 நாள் பயணமாக ஜனாதிபதி கோவிந்த் வந்துள்ளார், நேற்று நடந்த பேரவை பொன்விழா சிறப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ``ராணுவத்தில் இமாச்சல் வீரர்கள் ஆற்றும் பணி மகத்தானது. தற்போது, இம்மாநிலத்தை சேர்ந்த 1.20 லட்சம் வீரர்கள் ராணுவத்தில் உள்ளனர். ராணுவத்தில் தன்னலமற்ற வீரத்தை காட்டி உயிர்த்தியாகம் செய்த இம்மாநில வீரர் மேஜர் சோம்நாத் சர்மா, நாட்டின் மிக உயரிய பரம்வீர் சக்ரா விருதை முதன் முதலில் பெற்றார்,’’ என்றார். இந்த சிறப்பு கூட்டத்தில் தற்போதைய எம்எல்ஏ.க்கள் மட்டுமின்றி முன்னாள் முதல்வர்கள், எம்பி.க்கள், 93 எம்எல்ஏ.க்களும் பங்கேற்றனர்.

Related Stories:

More