×

குஜராத்தில் 24 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு : அடியோடு மாற்றி அமைக்கப்பட்டது விஜய் ரூபானி அமைச்சரவை!!

காந்திநகர்,:குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களும் வெளியேற்றப்பட்டு, 24 அமைச்சர்களும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.குஜராத் மாநில பாஜக முதல்வராக இருந்த விஜய் ரூபானி, தனது முதல்வர் பதவியை கடந்த சில நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். அவருக்கு மாற்றாக எம்எல்ஏ பூபேந்திர படேல் என்பவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து காந்திநகரில் உள்ள ஆளுனர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஆச்சாரியா தேவர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதிய அமைச்சரவையில் 10 கேபினட் அமைச்சர்களும் தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்களும் 9 இணை அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.விஜய் ரூபானியின் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த ஒருவர் கூட புதிய அமைச்சரவையில் இடம் பெறாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. விஜய் ரூபானிக்கு பிறகு முதல்வர் ஆவார் என்று கூறப்பட்ட நிதின் படேல் கூட அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அமைச்சராக பதவி ஏற்றத்தை அடுத்து சபாநாயகர் பதவியை ராஜேந்திர திவேதி ராஜினாமா செய்தார்.அமைச்சரவை முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்களுக்கான இலக்காக்கள் விரைவில் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாஜகவின் இந்த நடவடிக்கை மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Gujarat ,Vijay Roupani , விஜய் ரூபானி
× RELATED குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்