×

வெப்ப அலையால் ஆர்.சி.பி. பயிற்சி ரத்து: குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம்

குஜராத்: பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளதாக குஜராத் மாநில போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், குஜராத் போலீஸ் எச்சரிக்கையை அடுத்து அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருந்த பயிற்சியை ஆர்.சி.பி. அணி ரத்து செய்தது. விராட் கோலி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக குஜராத் போலீஸ் எச்சரித்துள்ளதாக வங்கமொழி நாளிதழான ஆனந்த் பஜார் தகவல் தெரிவித்த நிலையில், 2 நாள்களுக்கு முன் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 பேரை குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு கைது செய்தது. பிளே ஆஃப் சுற்றில் பங்கேற்க ஐபிஎல் அணிகள் அகமதாபாத் வந்தபோது 4 பேரும் அங்கு பிடிபட்டுள்ளனர்.

இந்நிலையில், குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் கூறியதாவது; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இன்று அகமதாபாத்தில் நடந்த பயிற்சி கடுமையான வெப்ப அலை காரணமாக ரத்து செய்தது என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை திட்டமிடப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான முக்கியமான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டிக்கு தயாராகி வருகின்றனர். அகமதாபாத்தில் உள்ள கடுமையான வெப்பநிலை RCB அணி நிர்வாகத்தை பயிற்சியை விட வீரர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெப்ப அலையால் ஆர்.சி.பி. பயிற்சி ரத்து: குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஜூலை 1 முதல் 3 புதிய குற்றவியல்...