×

பேரவையில் அதிகபட்சமாக 7,685 கேள்விகள் எழுப்பிய திமுக எம்எல்ஏ தாயகம் கவி: முதலிடம் பிடித்து சாதனை

சென்னை: சட்டப்பேரவையில் அதிகபட்சமாக 7,685 கேள்விகள் எழுப்பி திரு.வி.நகர் தொகுதி எம்.எல்.ஏ திமுக இளைஞர் அணி மாநில துணை செயலாளர், வழக்கறிஞர் ப.தாயகம் கவி முதலிடம் பிடித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவை கடந்த மே 11ம் தேதி தொடங்கியது. நேற்று வரை நடந்தது. இதில் 146 சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் இருந்து 24,501 கேள்விகள் நேரிடையாகவும், எழுத்துப்பூர்வமாகவும் கேட்கப்பட்டது.  அதிகபட்சமாக திரு.வி.நகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி 7,865 கேள்வி எழுப்பியுள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாவதாக பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி 6,478 கேள்விகளும், மூன்றாவது இடத்தில் சோழிங்கநல்லூர் திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் 3,583 கேள்விகளும், 4வது இடத்தில் பாமக எம்எல்ஏ அருள் 2,914 கேள்விகளும், 5வது இடத்தில் திருவாரூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் 1,291 கேள்விகளும் எழுப்பியுள்ளனர். இதையடுத்து திரு.வி.நகர் தொகுதி திமுக எம்எல்ஏ தாயகம் கவி அதிக பட்சமாக 7,865 கேள்விகள் எழுப்பி சாதனை படைத்துள்ளார்.

Tags : DMK ,MLA ,Homeland Poet , DMK
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா