அமைச்சர் முத்துசாமி பேச்சு: வீட்டு வசதி வாரிய வீடுகளை தரமாக கட்ட முதல்வர் உத்தரவு

சென்னை: அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கே.கே.நகர் கோட்டம் மூலம், ராமாபுரம் பாரதிசாலையில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள், சுயநிதிபிரிவு மூலம் கட்டி பயனாளர்களுக்கு 2019ம் ஆண்டு ஒப்படைப்பு செய்யப்பட்டது. தற்போது இந்த குடியிருப்பு கட்டிடத்தை தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வதும், உள்ளே இருக்கும் மணலும் இறுக்கமில்லாமல் இருக்கின்றன. இந்த நிலையில் நேற்று வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, எம்எல்ஏக்கள் காரம்பாக்கம் கணபதி, பிரபாகர் ராஜா மற்றும் வீட்டுவசதி வாரியத்துறை அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பை ஆய்வு செய்தனர். முன்னதாக, அங்கு குடியிருப்போரிடம் குறைகளை அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: வீட்டுவசதி வாரிய குடியிருப்பு என்றாலே பொதுமக்கள் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். இந்தநிலையை மாற்றி வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை மக்களே விரும்பி வந்து குடியேறும் அளவுக்கு தரம் உள்ளதாக கட்டவேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.

Related Stories: