×

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெறக்கூடும். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து சட்டீஸ்கர் நோக்கி நகர்ந்து செல்லும். தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், ஓரிரு உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.


Tags : Bay of Bengal ,Tamil Nadu , Bay of Bengal, heavy rain
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...