×

உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளமான https://tnsec.tn.nic.in யில் வெளியிட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்ற விவரங்களை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 19.3.2021 அன்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்கள் தங்களது பெயர்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கான பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும் எனில், முதலில் அவர்கள் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்களை சேர்க்க வேண்டும்.

இதற்கு தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்று அவர்களது பெயர்களை சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இவ்வாறு புதிதாகச் சேர்க்கப்படும் வாக்காளர்களின் பெயர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தொடர்புடைய தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னரே அவரது பெயர், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கிராம ஊராட்சி வார்டு வாரியான வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய ஊரக உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் உரியவாறு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu State Election Commission , Local Election Voter List Release: Tamil Nadu State Election Commission Announcement
× RELATED மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு