×

வத்திராயிருப்பில் கொரோனா பயமின்றி மாஸ்க் அணியாமல் சுற்றும் பொதுமக்கள்

வத்திராயிருப்பு: கொரோனா 3வது அலையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்களை அதிகப்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு வத்திராயிருப்பு தாலுகாவில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

வத்திராயிருப்பில் அரசு அலுவலககங்களுக்கு செல்பவர்கள், வௌியே நடமாடும் பொதுமக்கள், டூவீலரில் செல்பவர்கள், கடைகளுக்கு செல்பவர்கள் மாஸ்க் அணியாமல் சர்வசாதாரணமாக சுற்றித்திரிகின்றனர். மேலும் கடைகளில் கூடும் இடங்களில் சமூக இடைவௌியின்றி கூடுகின்றனர். கொரோனா அச்சமின்றி நடமாடி வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Corona , Corona fearlessly roaming the public without wearing a mask
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...