×

கோடைகாலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டை விட தற்போதைய கோடைக்காலத்தில் அதிக வெப்ப அலை வீசும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு என செய்திகள் தெரிவிக்கின்றன. இப்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும், மாநிலத்தில் இருக்கும் நீர்நிலைகளில் உள்ள நீரின் அளவு குறைந்து வருகிறது. பல இடங்களில் நீர்த்தேக்கங்கள் வரண்டு காணப்படுகின்றன. ஒரு சில இடங்களில் மக்கள் குடிநீருக்காக தொலைதூரத்திற்கு சென்று வரக்கூடிய நிலை உள்ளது.

மழை பெய்தால் ஓரளவுக்கு மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி ஆகும். மழை பெய்யவில்லை என்றால் தண்ணீருக்கு மக்கள் சிரமப்படக்கூடிய நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு, மாநிலத்தில் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும், பொது மக்களின் குடிநீருக்கும் தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதுதவிர, ஆங்காங்கே உள்ள கிணறுகளை தூர்வாருதல், கைப்பம்புகளை அமைத்தல், ஏற்கனவே தண்ணீர் வராத கைப்பம்புகளை சரிசெய்தல், நீர்த்தொட்டிகளை அமைத்தல், குடிநீர் குழாய்களைப் பராமரித்தல் போன்ற பணிகளை செய்தால் தண்ணீர் பற்றாக்குறையை போக்க உதவியாக இருக்கும். அதேபோல், தண்ணீரை சிக்கனமாக தேவைக்கு ஏற்ப பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

 

The post கோடைகாலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,GK Vasan ,CHENNAI ,Tamil State Congress Party ,President ,Dinakaran ,
× RELATED தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை...