×

மழைநீரால் குளமாக மாறிய சாலை-பொதுமக்கள் அதிருப்தி

மஞ்சூர் : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மைனலாமட்டம், தேனாடு, மைனிலை, கிட்டட்டிமட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500கும் ேமற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியினர் எந்த ஒரு தேவைகளுக்கும் மஞ்சூர் அல்லது ஊட்டி, குன்னுார் போன்ற பகுதிகளுக்கே சென்று வர வேண்டும். இந்நிலையில் மைனலாமட்டம் பகுதியில் இருந்து கிட்டட்டிமட்டம் வரையிலான தார் சாலை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை மிகவும் பழுதடைந்து பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து மண் சாலையாக காட்சியளிக்கிறது. மேலும் பல இடங்களில் பெரிய அளவில் குழிகள், பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள குழிகள் மற்றும் பள்ளங்களில் மழை நீர் தேங்கி சிறு குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் கார், ஜீப் போன்ற இலகு ரக வாகனங்களை இயக்க பெரும் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டுனர்கள் கூறுகின்றனர். அதேபோல் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது சற்று தடுமாறினாலும் குழிக்குள் விழுந்து காயங்கள் ஏற்படுகிறது. பழுதடைந்த இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சுற்றுவட்டார கிராமமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். இதை தொடர்ந்து மைனலாமட்டம் முதல் கிட்டட்டிசாலை வரை சாலையை உடனடியாக சீரமைக்க சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்….

The post மழைநீரால் குளமாக மாறிய சாலை-பொதுமக்கள் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Manjoor ,Mainalamattam ,Thenadu ,Mainilai ,Kittatimattam ,Nilgiri district ,
× RELATED வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு