×

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; வழக்கை ரத்து செய்ய தமிழக பாஜ வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சென்னை: பாஜ வேட்பாளரின் ஊழியர்களிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பாஜ அமைப்பு செயலாளர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது, திருநெல்வேலி தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் பணிபுரியும் 3 பேரிடமிருந்து. ரூ. 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் பதிவு செய்த வழக்கு பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து, எந்த காரணமும் தெரிவிக்காமல் சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறி சம்மனையும், வழக்கையும் ரத்து செய்யக்கோரி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புலன் விசாரணை சட்டவிரோதமானது. எனவே, இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் நீதிபதி சி.சரவணன் முன்பாக இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

The post ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; வழக்கை ரத்து செய்ய தமிழக பாஜ வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Chennai High Court ,CHENNAI ,High Court ,Secretary of the ,Dinakaran ,
× RELATED ப்ளூகிராஸ் அமைப்பை ஏற்று நடத்த கோரிய...