×

நாடு முழுவதும் அடுத்தாண்டுக்குள் 2 லட்சம் ஏக்கரில் மருத்துவ செடிகள்: ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: ஒன்றிய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மருத்துவ தாவரங்கள் ஆணையம், நாடு முழுவதும் 2 லட்சம் ஏக்கரில் மருத்துவ குணமிக்க மூலிகை செடிகளை வளர்க்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது. இது குறித்து ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `இத்திட்டத்தின் மூலம், விவசாயிகளின் வருமானம் உயர்வதுடன் பசுமை இந்தியா திட்ட கனவும் நனவாகும். சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆயுஷ் அமைச்சகம் அமல்படுத்தும் 2வது பிரமாண்ட திட்டம் இதுவாகும். இத்திட்டம் உத்தர பிரதேச மாநிலத்தின் சகரான்பூர், மகாராஷ்டிராவில் உள்ள புனே உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இதில், புனேவில் விவசாயிகளுக்கு 7,500 மருத்துவ மூலிகை செடிகள் வழங்கப்பட்டன,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Union AYUSH Ministry , Medicinal plants in 2 lakh acres across the country by next year: Union AYUSH Ministry Announcement
× RELATED கொரோனா வைரஸ் பாதிப்பை சித்த...