×

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சேரும் சில்லறை நாணயங்களை வங்கிகள் ஏற்க மறுப்பதால் பக்தர்களுக்கே திருப்பி அளிக்க முடிவு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் சேரும் சில்லறை நாணயங்களை வங்கிகள் ஏற்க மறுப்பதால் அவற்றை தனப் பிரசாதம் என்ற முறையில் பக்தர்களுக்கே திருப்பி அளிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழுமலையான் கோவில் உண்டியலில் தினசரி 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை சில்லறை நாணயங்கள் காணிக்கையாக சேகரம் ஆகின்றன.

ரூபாய் நோட்டுகளாக வரக்கூடியவை நேரடியாக வங்கிகளில் முதலீடு செய்யப்படும் நிலையில் சில்லறை நாணயங்களை வங்கிகள் வாங்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தேவஸ்தானத்தில் சில்லறை நாணயங்களின் இருப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் அறைக்கான வாடகையோடு கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையை நாணயங்களாக திருப்பி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Temple of Tirupati ,DeVos , Tirupati
× RELATED காளையார்கோவிலில் குளத்தில்...