×

இந்த ஆண்டு புதிய சட்டக்கல்லூரி இல்லை: அமைச்சர் ரகுபதி தகவல்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் (திமுக) பேசியதாவது:கும்பகோணத்தில் நீண்ட பாரம்பரியமிக்க நீதிமன்றங்கள் உள்ளன. அரசின் சார்பில் சட்டக்கல்லூரி அமைத்தால் சரியாக இருக்கும். அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களும் குறைந்த செலவில் சட்டம் படிக்க ஏதுவாக இருக்கும். கும்பகோணத்தில் மகளிர் நீதிமன்றம் ஒன்றை அமைத்து தர வேண்டும். அமைச்சர் ரகுபதி: தமிழகத்தில் தற்போது 16 சட்டக்கல்லூரிகள் உள்ளன. இதில் 17,433 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது தான் முதல்வரின் மேலான விருப்பம். ஆனால் கடந்த ஆட்சியில் ஏற்பட்ட அசாதாரணமான நிதி  நெருக்கடி காரணத்தால் இந்த ஆண்டில் எந்தவிதமான புதிய சட்டக்கல்லூரிகளும் தொடங்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே தான் அதற்கான வாய்ப்புகள் இல்லை.

* பாட்டு பாடிய எம்எல்ஏ
தமிழக சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள், சமூக நலன், வீட்டு வசதி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் (திமுக) பேசியதாவது: இந்த அவையில் கடந்த 5 ஆண்டுகளாக நானும் எம்எல்ஏ ஆக இருந்துள்ளேன். எதிர்க்கட்சி தலைவராக நமது முதல்வர் இருந்தார். அப்போது, எதை கேட்டாலும் மறுப்பார்கள். ஆனால் இன்றைக்கு, சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கண்ணியமான சபை, சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது என்று சொல்கிறார். அதைவிட சாட்சி வேறு என்ன இருக்கிறது.  ‘‘மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்... ஒரு மாசு குறையாத மன்னவன் இவர் என்று போற்றி புகழ வேண்டும்” (அவையில் பாட்டு பாடி காட்டினார்) இந்த பாடல் வரிகளை கண்ணதாசன் எம்ஜிஆருக்காக எழுதினார். ஆனால் எம்ஜிஆர் நமது முதல்வருக்காக பாடின பாட்டு. அந்தளவுக்கு இன்று நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. என்றார்.

Tags : Minister ,Raghupathi , No new law college this year: Minister Raghupathi informed
× RELATED கச்சத்தீவை கொடுக்க கலைஞர்...