×

போரூரில் மாற்று பாதையில் செல்லுமாறு கூறிய போக்குவரத்து காவலர் கன்னத்தில் பளார்: வடமாநில லாரி டிரைவர் கைது

பூந்தமல்லி: சென்னை போரூர் ஏரி, சிக்னல் அருகே பைபாஸ் சர்வீஸ் சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று, அந்த சர்வீஸ் சாலையில் மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட ஒரு லாரி செல்ல முற்பட்டது. அந்த நேரத்தில், போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீஸ்காரர், அந்த லாரியை மடக்கி மாற்று பாதையில் செல்லும்படி கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. லாரியை ஓட்டி வந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முஸ்தாக் அகமது என்பவர், போக்குவரத்து காவலர் சந்திரசேகரனின் கன்னத்தில் பளார் என தாக்கியுள்ளார். இதில் காவலர் நிலை தடுமாறினார்.

இதை பார்த்ததும் சக காவலர்கள் ஓடி வந்து அந்த டிரைவரை பிடிக்க முயன்றனர். அந்த நேரத்தில் அவர், லாரியில் இருந்த கத்தியை எடுத்து போலீசாரை மிரட்டியுள்ளார். இருப்பினும் காவலர்கள், அவரை மடக்கி பிடித்து போரூர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். பின்னர், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு ஊழியரை தாக்கியது, ஆபாசமாக பேசியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சென்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Traffic Guard ,Borore ,North State , In battle, on the alternate route, guard, cheek, balar
× RELATED வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி வடமாநில...