×

இறுதி விசாரணைக்கான வழக்குகள் செப்.1ம் தேதி முதல் நேரடி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்காக காத்திருக்கும் அனைத்து வழக்குகளும் வரும் 1ம் தேதி முதல் நேரடியாக விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் காணொலி காட்சி மூலமாக விசாரணை நடத்தபடுகிறது. குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தில் கடந்தாண்டு, மார்ச் முதல் அனைத்து நேரடி விசாரணைகளும் ரத்து செய்யப்பட்டு காணொலி மூலமாக மட்டுமே விசாரணை நடைபெற்று வருகிறது. நேரடி விசாரணையை நடத்தும்படி பார் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகம் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் இறுதி விசாரணைக்காக காத்திருக்கும் இருக்கும் அனைத்தும் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் நேரடியாக விசாரிக்கப்படும். வழக்கறிஞர்கள் வர இயலாத நிலை ஏற்பட்டால் கானொலி மூலமாகவும் விசாரணையில் பங்கேற்கலாம். அதற்கான ஏற்பாடுகளும் வழக்கம்போல் செயல்படும்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Supreme Court , Final hearing, cases, Sept. 1, hearing
× RELATED கபில் சிபலுக்கு காங்கிரஸ் வாழ்த்து