அரியானா மாநிலத்தில் சூரஜ்பூர் கர்ணால்- பஸ்தாரா சுங்கச் சாவடியில் விவசாயிகள் முற்றுகை: போலீசார் தடியடி

அரியானா: அரியானா மாநிலத்தில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்கா-ஜிராக்பூர் நெடுஞ்சாலையில் சூரஜ்பூர் கர்ணால்- பஸ்தாரா சுங்கச் சாவடியில் விவசாயிகள் முற்றுகையிட்டனர். போலீசார் தடியடி நடத்தியதால் ஏராளமான விவசாயிகள் பலத்த காயமடைந்தனர். போலீஸ் தடியடியில் படுகாயமற்ற விவாசாயிகள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளாட்சி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: