×

அனைத்து பல்கலைக்கழகங்கள் மீண்டும் நடத்த வேண்டிய அரியர், இறுதியாண்டு தேர்வுகள் ஜூன் 14ம் தேதி துவங்கும்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட இதர பல்கலைக் கழகங்கள் நடத்த வேண்டிய அரியர் தேர்வுகள், இறுதியாண்டு  தேர்வுகள் ஜூன் 14ம் தேதி முதல் நடக்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து கல்லூரிகளும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால்  கல்லூரித் தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, பல்கலைக் கழக மானியக் குழு அமைத்த உயர்மட்டக் குழுவின்  பரிந்துரையை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தின் உயர்கல்வித்துறை சில நடவடிக்கை எடுத்தது. அதன் படி, இறுதியாண்டு தேர்வு  எழுத வேண்டியவர்கள், அரியர் தேர்வு எழுத வேண்டியர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு பிறகு வெளியிடப்பட்ட தேர்வு  முடிவுகளில் குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, தற்போது மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட  நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் மேற்கொண்ட ஆய்வுக்கு பிறகு அரியர் தேர்வுகள் நடத்துவதற்கான தேதியை நேற்று  அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:  2017ம் ஆண்டு ஒழுங்குமுறை நடவடிக்கையின்  கீழ் தற்போது தேர்வு எழுதாமல் உள்ள மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட  உள்ளது. குறிப்பாக அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டு தேர்வு  எழுதினர் அதன் மீது சில குறைகள் தெரிவிக்கப்பட்டது. அது  குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் கட்டித் தேர்வு  எழுதியவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம். கட்டணம் செலுத்தாமல் தேர்வு எழுதாமல் உள்ளவர்கள் ஜூன் 3ம் தேதிக்குள் பணம் செலுத்தி  தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் பணம்  செலுத்த வேண்டியதில்லை. கடந்த  2016 மற்றும்  2017ம் ஆண்டை சேர்ந்த இளநிலை பட்டதாரிகளுக்கும் முதுநிலை பட்டதாரிகளுக்கும் ஜூன் 14ம் தேதி தேர்வுகள்  தொடங்கும். சில பல்கலைக் கழகங்கள் தேர்வுகளை நடத்தியுள்ளன. அவை  தவிர இதர பல்கலைக் கழகங்கள் இளநிலை, முதுநிலை,  2013ம் ஆண்டு பதிவு செய்த முதுநிலை பட்டதாரிகளுக்கு ஜூன் 21ம் தேதி தேர்வுகள் தொடங்கும். பழைய தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதால், மீண்டும் இந்த தேர்வுகள்  மாணவர்களின் நலன் கருதி நடத்தப்படுகிறது. ஆன்லைன்  மூலம் தேர்வு நடத்தினா–்ல அது கிராமப் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கடினமாக  இருக்கும். இந்த தேர்வு மே 25ம் தேதி நடக்கும்  என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த தேதியை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி அரியர் வைத்துள்ளவர்கள், இறுதி ஆண்டு  படிப்பவர்கள் ஆகியோருக்கு ஜூன் 15ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதிக்குள் தேர்வுகளை ந டத்தி ஜூலை 30ம் தேதிக்குள் தேர்வு  முடிவுகளை அறிவிக்கப்பட வேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.  அண்ணா பல்கலைக்  கழகம் மட்டும் அல்லாமல் அனைத்து பல்கலைக் கழகங்களின் தேர்வு முடிவுகள் ஜூலை 30ம் தேதிக்குள் அறிவிக்கப்பட உள்ளது.  இ்வ்வாறு அவர் தெரிவித்தார். …

The post அனைத்து பல்கலைக்கழகங்கள் மீண்டும் நடத்த வேண்டிய அரியர், இறுதியாண்டு தேர்வுகள் ஜூன் 14ம் தேதி துவங்கும்: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Arier ,Minister ,Ponmudi ,Chennai ,Anna University ,Dinakaran ,
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...