×

25 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை தமிழகத்தில் புதிதாக 1,668 பேருக்கு கொரோனா: 24 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,668 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி நேற்று 24 பேர்  உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில்   நேற்று 1,63,177 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,668   பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால்   பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,97,603 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனை   மற்றும் வீட்டுத்தனிமை என 19,621 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று   ஒரே நாளில் மட்டும் 1,887 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 25,43,319 ஆக உள்ளது.   

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 24 பேர் நேற்று உயிரிழந்தனர்.   தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும், அரசு மருத்துவமனைகளில் 19 பேரும்   உயிரிழந்தனர். கோவையில் 2 பேர், சென்னை 1, கடலூர் 3, திருப்பூர் 5, திருச்சி 3, திருவாரூர் 2 என 24 பேர் உயிரிந்துள்ளனர். அதன்படி இதுவரை 34,663 பேர் சிகிச்சை  பலனின்றி  உயிரிழந்துள்ளனர். மேலும் 25 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏதும் இல்லை. சென்னையில் நேற்று புதிதாக 185 பேர், கோவையில் 199  பேர், ஈரோடு 158 பேர், செங்கல்பட்டு 102 பேர் என 4 மாவட்டங்களில் நூற்றுக்கும்  மேற்பட்டவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு  எண்ணிக்கை நூற்றுக்கும்  குறைவாகவே உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,Tamil Nadu , Mortality, corona, hospital
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...